மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நீடிப்புக் கோர வழியில்லை – ஜிஎஸ்பி பிளஸ் க்கு மீள விண்ணப்பிக்க வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ்  சலுகைக்கு, சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவைப் பாராட்டிய ரஷ்ய தூதுவர்

ரஷ்ய போரில் சிறிலங்கா நடுநிலையான நிலைப்பாட்டை, எடுத்திருப்பதற்கு, சிறிலங்காவிற்கான ரஷ்ய தூதுவர் லெவன் சஹாகார்யன் (Levan Dzhagaryan), நன்றி தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு.

பட்டலந்த  வதைமுகாம்கள் தொடர்பான, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எவ்பிஐ அறிக்கையை நிராகரித்தால் ட்ரம்ப் கோபப்படக் கூடும் – ரணில் எச்சரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் (FBI)  கண்டறிவுகளை நிராகரித்தால்,  டொனால்ட் ட்ரம்ப் எதிர்மறையாக பதிலளிக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

சீன உர மோசடி – விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவில் இருந்து, இயற்கை உரத்தை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக, விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஆய்வுகளை தொடங்குகிறது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு இன்று முதல் சிறிலங்காவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியா – சிறிலங்காவுக்கு ஒரு பாடம்

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த அறிவிப்பு, சிறிலங்காவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலேயே தங்கியது சிறிலங்கா குழு- பேச்சுக்களை தொடர முடிவு.

அமெரிக்காவுடன், பேச்சு நடத்துவதற்கு சென்ற சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவினர், அங்கேயே தங்கியிருந்து உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் பசில்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்- தயாசிறி ஜயசேகர

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.