துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சூ ஜியான்வேய் இன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்தார்.
சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.
புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.