கைதுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றை நாடினார் கோட்டா
தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கோட்டாபய ராஜபக்ச சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், காவல்துறைமா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
