மேலும்

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றச் செயலாளர் குஷானி ரோகனதீரவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான முறைகேடு, பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுதல், நிதி முறைகேடுகள், நலன்சார் முரண்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளை மீறியது உள்ளிட்ட சுமார் 50 குற்றச்சாட்டுகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கையாள்வதில் பாரபட்சமான மற்றும் ஜனநாயக விரோதமான நடத்தை இருப்பதாகக் கூறி, சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *