மேலும்

நீதியரசர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தம் அரசிதழில் வெளியீடு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான சட்டமூலம்  அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதைத் திருத்தவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த சட்டமூலம் முன்மொழிகிறது.

இதற்கமைய அரசியலமைப்பின் 107(5) பிரிவில் திருத்தம் செய்யப்படும்.

அதன்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 67 வயதை எட்டும்போது ஓய்வு பெறுவார்கள், அதே நேரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயதில் ஓய்வு பெறுவார்கள்.

மேலும், முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் 67 வயதை எட்டும்போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் போதோ, இந்த இரண்டில் எது முந்தையதோ அப்போது ஓய்வு பெறுவார்.

இதற்கிடையில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 137வது பிரிவில் திருத்தம் செய்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அதிகபட்ச நீதியரசர்களின் எண்ணிக்கையை 19லிருந்து 24 ஆக உயர்த்தவும் முன்மொழிந்துள்ளது.

சட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் உரைகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், சிங்கள உரையே மேலோங்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *