மேலும்

சிறிலங்காவில் ஜூலை  மாத பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்,  பணவீக்கம் ஜூலை  மாதம் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதம்  6.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலையில், 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பணவீக்கம், ஜூன் மாதம் 3.6 சதவீதமாக  பதிவான நிலையில், ஜூலையில் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம், ஜூன் மாதத்தில் பதிவாகிய 8.4 சதவீதத்தில் இருந்து ஜூலையில் 7.8 சதவீதமாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *