இன்று மட்டும் செம்மணியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்- இதுவரை 339
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது, 12 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 21ஆம் நாள் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்ட போதே, இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை இன்றைய அகழ்வின் போது, 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 318 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
படங்கள்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)


