மேலும்

யாழ். போதனா மருத்துவமனையில் 100 கோடி ரூபா மருந்துப்பொருள்கள் நாசம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்  100 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றது.

இதன்போது, களஞ்சியத்தில் இருந்த  60 வீதமான பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அழிந்து போனதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *