மேலும்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான அரசிதழ் வெளியீடு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை, ரத்துச் செய்வதற்கு இந்த மாத தொடக்கத்தில் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இந்த சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பணியகத்தில் உள்ள முப்படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்,  தமது சொந்த படைப்பிரிவுகளுக்கு திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முப்படைகளின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பணியகம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *