மேலும்

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது.

இதையடுத்து சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு  எதிராக,  153 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 49 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, 104 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும், ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *