சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது
எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது என சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
சீனா தனக்குத் தேவையான 76 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்யும், நெருக்கடியில் உள்ளபோதும், சிறிலங்காவுக்கு எரிபொருள் உதவியை வழங்கும் ஒரே நாடாக சீனா திகழ்கிறது.
சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதெல்லாம், உதவி வழங்குவதில் சீனா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
விநியோகச் சவால்களைக் கடந்து, கடந்த மாதமும் இந்த மாதமும் சினோபெக் மூலம் எரிபொருள் சிறிலங்காவை வந்தடைந்தது.
சிறிலங்காவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க உதவும் வகையில், தொடர்ச்சியான எரிபொருள் ஆதரவை வழங்க சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எரிபொருளைத் தாண்டி, விவசாயத் துறைக்கும் சீனா ஆதரவளித்து வருகிறது.
உலகளாவிய இயற்கை எரிவாயு தட்டுப்பாடுகள், உலகெங்கிலும் உர உற்பத்தியைப் பாதித்துள்ளன.
ஆனாலும் சிறிலங்காவுக்கு உரங்களை ஏற்றுமதி செய்வதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
