மேலும்

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட  சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைச் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல்நிலை குறித்து நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைக்குப் பின்னர் அவர் ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டு, பின்னர் மருத்துவ ஆலோசனையின் பேரில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *