மேலும்

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடுகிறது பிரிட்ஜோப் நான்சென்

ஐ.நாவின் கொடியுடனான R/V டொக்டர் பிரிட்ஜோப் நான்சென் ( Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் கீழ் ஐ.நா கொடியுடன் இயக்கப்படும் இந்தக்  கப்பல் நேற்று சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்தது.

இந்தக் கப்பல், சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்தில் கடல்சார்  ஆய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில், நீரியல் வளங்கள்  மற்றும் பெருங்கடல் வள அமைச்சு மற்றும் தேசிய நீர்வாழ் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

32 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில்,  கடல்வாழ் வளங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மதிப்பீடு செய்யப்படும்.

2018 ஆம் ஆண்டில் இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபட்டிருந்தது.

கடந்த ஆண்டு இந்தக் கப்பல் சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்த நிலையில், அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்தால் இழுபறி நிலை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *