திறைசேரி செயலாளர் அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்டவரா?- புதிய சர்ச்சை
அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு விவகாரங்கள் திணைக்களத்திடம் இருந்து, சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமாவின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்கு, அவுஸ்ரேலியாவின் 1982 ஆம் ஆண்டின் தகவல் சுதந்திரச் சட்டம் எண் 3 இன் பிரிவு 15 இன் படி தேவையான தகவல்களைக் கோரி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
திறைசேரி செயலாளராகவும் உள்ள ஹர்ஷன சூரியப்பெரும, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு தொடர்பாக தீவிரமடைந்து வரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்ட ஹர்ஷன சூரியப்பெரும, நாட்டின் அரசியலமைப்பு விதிகளை மீறி, தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலின் மூலம் நாடதாளுமன்றத்திற்குள் நுழைந்ததற்காக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக நாகானந்த கொடிதுவக்கு,தெரிவித்துள்ளார்.
இது தெளிவாக ஒரு பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மைப் பிரச்சினை மற்றும் சிறிலங்கா அரசியலமைப்பின் மீறலாகும்.
இந்தச் செயல் கொமன்வெல்த் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் சட்டத்தையும் மீறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
