அரசியல்வாதிகளுக்கும் குற்றக் கும்பல்களுக்கும் தொடர்பு
சிறிலங்காவின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட 10 குற்றக் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்புகளை அரச புலனாய்வு சேவை கண்டறிந்துள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு, இடையிலான தொடர்புகளை அரச புலனாய்வுச் சேவை அறிக்கையிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய மற்றும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொடர்புகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு இது வழிவகுத்துள்ளது.
இதனை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
