மேலும்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் – சிறிலங்கா படைச் சிப்பாய் கைது

sri-lanka-armyகிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பேருந்து ஒன்றில் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய 31 வயதுடைய சிறிலங்கா படைச் சிப்பாயே நாச்சிக்குடா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *