மேலும்

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் விஜித ஹேரத்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இணைந்து, அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் குழுவின் 25-வது கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக, எக்ஸ் தளத்தில் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பானது, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *