மேலும்

கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்

1983-ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை  சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக,  அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் நியமனம் குறித்து சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று  நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1983-ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளின் தாக்கத்தை ஆய்வு செய்து, அது குறித்த விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் இந்தக் குழு சமர்ப்பிக்கும்.

இந்தக் குழுவில் அமைச்சர் சரோஜா போல்ராஜ் (தலைவர்),  அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர,  பிரதி அமைச்சர் முனீர் முலபர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ஞானமுத்து சிறீநேசன், கிருஷ்ணன் கலைச்செல்வி, தனுர திஸாநாயக்க, சேன நாணயக்கார, சுரங்க ரத்நாயக்க, ஹிருனி விஜேசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *