மகிந்த ராஜபக்சவுக்கு இதய கோளாறு- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபகசவுக்கு திடீர் இதயக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை கொழும்பு நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிருலப்பனையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக மகிந்த ராஜபக்ச பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
