மேலும்

மகிந்த பற்றி வெளியான செய்திகள் பொய் – மறுக்கிறார் ஊடகப் பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என்று, அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே, தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது இல்லத்தில் தங்கியிருப்பதாகவும்,, நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பலவீனமடைந்து விட்டதாகச் சித்தரிப்பதற்காகவே அரசியல் எதிர்ப்பாளர்கள் இத்தகைய செய்திகளைப் பரப்புவதாகவும், பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களால் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் மனோஜ் கமகே கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *