சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் மொன்டானா ஆளுநர் சந்திப்பு
அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான்ஃபோர்டே (Greg Gianforte) சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான்ஃபோர்டே (Greg Gianforte) சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கறுப்பு ஜூலை இனவன்முறை தொடர்பான செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது. பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான ‘கறுப்பு ஜூலை’ இனவன்முறைகள் குறித்து விசாரிக்க, அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி, செல்வம் அடைக்கலநாதன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கக் கோரி, ஆளும்கட்சியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
அனைத்துலக உடன்பாடுகளில் கையெழுத்திட்ட ஐ.நா உறுப்பு நாடு என்ற வகையில், தனது தனித்துவ பொருளாதார வலயத்தில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையானதை வழங்குவதிலிருந்து சிறிலங்கா விலகிக்கொள்ள முடியாது என ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று மன்னிப்பும் கோரியுள்ளார்.
‘கறுப்பு ஜூலை’ சம்பவங்களை விசாரிப்பதற்கு அதிபர் ஆணைக்குழுவை அமைப்பதை விட, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதே, பயனுள்ளதாக இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
1983-ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிய, அதிபர் ஆணைக்குழுவொன்றை நியமிக்க கோரும் தனிநபர் தீர்மானத்தை, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், வல்லுநர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவில் இருந்து வேறுபட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அழைப்பு விடுத்தார்.