மேலும்

நேபாளத்திற்கு உதவ சிறிலங்கா முப்படைகளும் தயார் நிலையில்

நேபாளத்தில் பேரழிவை  ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் உதவுவதற்காக, சிறிலங்கா முப்படைகளையும் படைகளையும் சேர்ந்த படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நேபாள அரசாங்கத்திடமிருந்து தேவையான படையினர் மற்றும் உபகரணங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் அழைப்போ அல்லது அறிவுறுத்தல்களோ இதுவரை கிடைக்காததால், நேபாளத்திற்கு சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கு இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

முப்படைகளிலிருந்தும் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.  அறிவுறுத்தல்கள் கிடைத்தால் அவசரநிலைக்கு ஆதரவளிக்க படையினர் அனுப்பப்படலாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேபாளம் கோரிக்கை விடுத்து, சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியவுடன், தேவையான படையினரை திரட்ட முடியும் என்பதே இந்தத் தயார்நிலை ஏற்பாடுகளின் பொருள் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *