மேலும்

செப்ரெம்பர் 22இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 சந்தேநபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22 ஆம் நாள் தீர்ப்பளிக்கவுள்ளதாக  கொழும்பு நிரந்தர நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நேற்று தீர்ப்பிற்கான நாளை அறிவித்தது.

சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதல்களுக்கு உதவுதல் மற்றும் தூண்டுதல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சேகரித்தல், மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உட்பட, குற்றம்சாட்டப்பட்ட 25 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் 23,270 குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் தீவிரவாதக் குழுவுடன் குற்றம்சாட்டப்பட்ட பலருக்குத் தொடர்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் நௌஃபர் மௌலவியும் ஒருவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *