மேலும்

ஐ.நா பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கமாட்டார்

அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின்  81வது உயர்மட்டப் பொது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பொதுச் சபையின் 81வது அமர்வின் உயர்மட்ட பொது விவாதம் செப்ரெம்பர் 22 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

எனினும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இதில் பங்கேற்கமாட்டார் என்றும், வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத்,  அவரது சார்பில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  செப்ரெம்பர் 26 ஆம் நாள் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றியுள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரஸின் பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் நாளுடன் முடிவடைகின்ற நிலையில், ஐ.நா பொதுச் சபைக்கு இது ஒரு முக்கியமான அமர்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *