செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்- 300ஐ தாண்டியது
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 18 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன.
இதன்போது, மேலும் 6 மனித மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின், எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களின் இரண்டு எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.



