மேலும்

2 மணிநேரம் வாக்குமூலம் அளித்து விட்டு வெளியேறினார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம்  தொடர்பாக,  வாக்குமூலம் அளிக்க வருமாறு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, இன்று காலை சுமார் 9.30 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர்  முன்னிலையாகியிருந்தார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக வாக்குமூலம் அளித்த பின்னர், காலை  11.50 மணியளவில் மகிந்த ராஜபக்ச அங்கிருந்த  வெளியேறினார்.

மகிந்த ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க வந்த போதும், அவர் அங்கிருந்து வெளியேறிய போதும்,  முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அங்கு குழுமி நின்று கோசம் எழுப்பி, அவருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *