மேலும்

நீதித்துறை சுதந்திரத்தை பேணுமாறு சிறிலங்கா அதிபரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் கோரிக்கை

நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தைப் பேணுமாறு  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஒரு மனுவை அனுப்பவுள்ளனர்.

2026 மே 25 அன்று நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாட மக்கள் தயாராக இருக்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க  மேநாள் பேரணியில்  உரையாற்றும் போது கூறியது தொடர்பாகவே அவர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பவுள்ளனர்.

சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரோஹித அபேகுணவர்தன, சாமர சம்பத் தசாநாயக்க, கயந்த கருணாதிலக, இம்ரான் மஹ்ரூப், ரஞ்சித் மத்தும பண்டார, ஹேஷா விதானகே, ஹர்ஷன ராஜகருண, நிசாம் காரியப்பர், ரவூப் ஹக்கீம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, எஸ்.எம். மரிக்கார், ரோஹண பண்டார, சுஜீவ சேனசிங்க மற்றும் திலிப் வேதாரச்சி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்தை திரும்பப் பெறுமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *