மேலும்

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 7 வது நாளான நேற்று கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின் போது, நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், இதுவரை  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.

படம் – பிரபாகரன் டிலக்சன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *