கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி ஐ.என்.எஸ். சிந்துகேசரி
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துகேசரி,கொழும்பு துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
செயல்பாட்டுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நீர்மூழ்கி கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படை, பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேற்பு அளித்துள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பல், கொழும்பில் தரித்திருக்கும் போது, சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், இந்திய மாலுமிகள் பங்கேற்கவுள்ளனர்.

