மேலும்

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி, அவுஸ்ரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய இருதரப்புக் கடன் திருப்பிச் செலுத்துதலின் ஒரு பகுதியாகும்;   2025  செப்ரெம்பரில் இதனை செலுத்த வேண்டியிருந்த நிலையில்,  இந்தத் திசைதிருப்பல் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றிருந்தது.

சிறிலங்கா உரிய தொகையைச் செலுத்திய பின்னர், இணையக் குற்றவாளிகள் தலையிட்டு நிதியை மற்ற கணக்குகளுக்குத் திசை திருப்பி விட்டதாக நிதி அமைச்சின் செயலாளர்  ஹர்ஷன சூரியப்பெரும ஒரு  தெரிவித்தார்.

இது தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர்

“எங்கள் பார்வையில், நான் கூற விரும்புவது இரண்டு விடயங்கள்தான்.

முதலாவதாக, இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் தெளிவாக அறிந்திருக்கிறோம், மேலும் கன்பெராவில் உள்ள எங்கள் அதிகாரிகள் சிறிலங்காவின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

இரண்டாவதாக, சிறிலஙகா கடன் நிலைத்தன்மைக்குத் திரும்புவதற்கு ஆதரவளிப்பதில் எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது என்று கூறியுள்ளார்.

முக்கிய பிரச்சினைகளை சிறிலங்காவே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *