மேலும்

2.5 மில்லியன் டொலர் திருட்டு- அனைத்துலக நாணய நிதியம் உன்னிப்பாக கண்காணிப்பு.

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மறுசீரமைப்புத் துறையின்  கணினி அமைப்புகளுக்கு அனுமதியின்றி அணுகப்பட்டதை உறுதி செய்து சிறிலங்கா நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இந்த முக்கிய நிகழ்வை நாங்கள் கவனத்தில் கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர்  குறப்பிட்டுள்ளார்.

இந்த நிதி, அவுஸ்ரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *