அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான லங்கா உர நிறுவனத்தின் துணை கொள்வனவு முகாமையாளராக குமார ஜயக்கொடி பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்,கொள்வனவின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக நன்மை பெற உதவியதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம்சாடியுள்ளது.
இந்த கொள்முதல் முடிவின் விளைவாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கு 8.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 70(அ) இன் கீழ், இந்த நடவடிக்கைகள் ஊழல் குற்றமாகும் என்று கூறி ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பான குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
