மேலும்

சென்னைக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் நியமனத்தில் சர்ச்சை

சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேதீஸ்வரன் கணேசநாதன் இராஜதந்திர அனுபவமோ, வெளிநாட்டு சேவை அனுபவங்களையோ கொண்டிராதவர்.

ஜேவிபி ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவுடனான உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான இடமாக சென்னையில் உள்ள துணைத் தூதரகம் இருந்து வரும் நிலையில் அதற்கு அனுபவம் இல்லாத ஒருவரை நியமித்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிவிவகாரச் சேவையை அரசியல் மயப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சில் உள்ள இராஜதந்திரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வெளிவிவகார சேவையில் அரசியல் நியமனங்கள் இருக்காது என்று கூறிய தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா படைகளைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் பலரை வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமித்தது.

தற்போது தமது கட்சி ஆதரவாளர்களையும் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கத் தொடங்கியிருப்பது, வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *