செம்மணி – சித்துப்பாத்தியில் இன்று வரை 169 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணி இன்று 35வது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நேற்றைய புதைகுழி விரிவாக்கத்தின் போது அடையாளப்படுத்தப்பட்ட 16 மனித எலும்புக் கூடுகளில், சிறுவர்களுடையவர் என்று நம்பப்படுகின்றவை உள்ளிட்ட 8 எலும்புக்கூடுகள், முழுமையாக இன்று மீட்டெடுக்கப்பட்டன.
அதேவேளை இன்றைய அகழ்வின் போது, மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை, 169 ஆகவும், முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 158ஆகவும் அதிகரித்துள்ளன.


