பிரகீத் எக்னெலிகொட வழக்கில் ஷானியும் சாட்சியாளராக சேர்ப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 25, ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், ட்ரயல்-அட்-பார்முறையில் இடம்பெற்று வருகிறது.
இந்த வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக, நீதிபதிகளுக்கு, சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
கிரிதல சிறிலங்கா இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரத்ன மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.