மேலும்

அமெரிக்க நிறுவனத்துக்கு 17 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நவீனமயப்படுத்தும், பல பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

17 பில்லியன் ரூபா (100 மில்லியன் டொலர்) பெறுமதியான இந்த ஒப்பந்தம், முன்னர், UOP LLC அல்லது Universal Oil Products என அழைக்கப்பட்ட, Honeywell UOP என்ற பல்தேசிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 50 ஆயிரம் பீப்பாய் என சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ள, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், நாளொன்றுக்கு 70 ஆயிரம் பீப்பாய் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக, அவற்றின் இயந்திரங்கள் தரமுயர்த்தப்படவுள்ளன.

அனைத்துலக அளவில் கேள்விப் பத்திரம் கோரப்பட்ட நிலையில், அமெரிக்க நிறுவனம் மாத்திரமே அதனை ஏலத்தில் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு  இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம், சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதியை 70 வீதத்தில் இருந்து 50 வீதமாக குறைக்க முடியும்.

தற்போது, சிறிலங்காவின் எண்ணெய் தேவையில் 30 வீதத்தை  மாத்திரமே, சபுகஸ்கந்த நிறுவனம் சுத்திகரித்து வழங்குகிறது.

இது நவீனமயப்படுத்தப்பட்ட பின்னர், மசகு எண்ணெயை பல்வேறு வகையில் சுத்திகரிக்கும். தற்போது, இரண்டு வகையாக மாத்திரமே சுத்திகரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *