மேலும்

அதிபர் தேர்தலை குழப்பும் பருவமழை

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பரப்புரைகள், மோசமான காலநிலையால் பாதிக்கப்படக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் தொடக்கம் நொவம்பர் வரை , இடை பருவமழைக் காலமாகும். இந்தக் காலத்தில் பெரும்பாலும் மாலை நேரங்களில் மழை பெய்யும்.

நாட்டின் மழைவீ்ழ்ச்சியில் 30 சதவீதம், இந்த இடைப் பருவநிலைக் காலத்திலேயே கிடைக்கிறது.

பூகோள காலநிலைப் போக்கின் அடிப்படையில் செப்ரெம்பருக்கும் நொவம்பருக்கும் இடைப்பட்ட இந்தக் காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, மழைக்காலமாக  இருந்தாலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மேலதிக தேர்தல் ஆணையர் ரசிக பீரிஸ்,  தெரிவித்தார்.

ஏதேனும் பேரழிவு நிலைமை ஏற்பட்டால்,  கடற்படை மற்றும் இடர்முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை கோரப் போவதாகவும்,  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *