மேலும்

நீர்கொழும்பில் பதற்றம் – ஊரடங்குச்சட்டம் அமுல்

சிறிலங்காவின் நீர்கொழும்பு நகரில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – பொருதோட்ட பகுதியில் இரண்டு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதலாக வெடித்தது.

இதன்போது, வீதிகளில் பல வாகனங்கள், அடித்து நொருக்கப்பட்டதுடன், தீயிட்டு எரிக்கப்பட்டன.

நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, இன்று மாலை 7 மணியளவில் நீர்கொழும்பு காவல்துறை பிரிவில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

நாளை காலை 7 மணிவரை அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் தற்போது, சிறிலங்கா இராணுவம், காவல்துறை, விமானப்படை, சிறப்பு அதிரடிப்படை என்பன குவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *