மேலும்

மாதம்: April 2019

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார்.

சிறிலங்கா கடற்படை அதிகாரியின் முறைப்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கினார் என செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு

gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது  அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

சிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம் நாள் முடிவெடுக்கிறது தமிழ் அரசு கட்சி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் நாள் முடிவெடுக்கவுள்ளது.

முகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம் நாலாம் மாடியில் விசாரணை

முகநூல் பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

யாழ். ஊடகவியலாளர் தயாபரன் படுகாயம் – உந்துருளி விபத்து குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் -புத்தூரில், உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த ஊடகவியலாளர் ஆர்.தயாபரன், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்

அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி

அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா

2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

சுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.