வடக்கில் 248 பாடசாலைகளுக்கு மூடுவிழா
வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளையே மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
50 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், முன்னேற்றங்களை காண்பிக்காவிட்டால், அவற்றை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
மூடப்படும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், அருகில் உள்ள பாடசாலைகளுடன் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
50 மாணவர்களுக்குக் குறைவாக கல்வி கற்கும் பாடசாலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஏற்படும் செலவுகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.