மேலும்

மாதம்: January 2019

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு ஆளுனர்

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க சீனா இணக்கம்

சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மேலும் நிதியுதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய திட்டங்களின் மூலம், சிறிலங்காவுக்கு நிதியுதவிகளை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக,  நி்தியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடல் கண்காணிப்புக்கான அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

நிதியுதவியைப் பெற மங்கள சமரவீர அமெரிக்காவுக்குப் பயணம்

அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது  தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முதல் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 – குறும்படத் திரைக் கதைப் போட்டி

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக ‘குறும்படத் திரைக் கதைப் போட்டி’ நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக ‘இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை’ எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் – சம்பந்தன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளமா?

திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு  அமெரிக்காவுக்கு,  அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

புதூர் ஆயுதப் பொதி  – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பினார்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.