மேலும்

கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 – குறும்படத் திரைக் கதைப் போட்டி

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக ‘குறும்படத் திரைக் கதைப் போட்டி’ நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக ‘இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை’ எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.

1.இத்தகைய எழுத்துப் போட்டி தமிழ் இலக்கிய வெளியில் முதற் தடவையாக நடைபெறுகிறது. எனவே தகைசார் ஆற்றலாளர்களான தங்களது எண்ண வெளிப்பாடுகளை தகுந்த முறையில் தொகுத்து ஊடக – சமூக ஊடகப் பரப்பில் பகிர பெருவிருப்பம் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்.

  1. முதல் பரிசு பெற்ற திரைக் கதையின் படமாக்கலின்போது சிறப்பு ஊக்குவிப்புப் பரிசு 30000 இந்திய ருபாய்கள்:

இதனை A Gun & a Ring திரைப்படம் தயாரித்த நிறுவனம் Eyecatch Multimedia Inc வழங்கவுள்ளது!

முதற் பரிசுபெறும் குறும்படத் திரைக் கதையின் திரையாக்கலின் போது சிறப்பு ஊக்கப் பரிசாக 30,000 இந்திய ரூபாய்கள் Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.

இதற்கமைவாக இப்பாட்டியின் கடைசிநாள் 31.01.2019 வரை நீட்டிக்கப்படுகிறது.

  1. போட்டி தொடர்பான மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் பகிர்ந்துள்ள காணொலி விபரணம் https://www.youtube.com/watch?v=VSUWh77dwkw

3.போட்டி விபரம் :

இலங்கைத் தமிழர்கள் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றவாறு வாழும் ஓர் இனக்குழுமம். இந்த ‘இலங்கைத் தமிழர் வாழ்வு’ தொடர்பாக பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியுமான கதைக் களத்தை முன்வைத்து உலகமெங்குமிருந்தும் இந்தக் குறும்படத் திரைக்கதைப் போட்டியில் பங்குபெற அழைக்கிறது காக்கை குழுமம். இதற்கேற்ப 15 நிமிடங்களுக்குட்பட்ட குறும்படத் திரைக் கதைகளை உலகத் தமிழ் எழுத்தாளர்களிடம் கோரப்படுகிறது.

உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை  வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது.

இலங்கைத் தமிழர் வாழ்க்கை : பூர்வீகம் –இடப்பெயர்வு – புலம்பெயர்வு – வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் கொண்ட கதைக் களம்.

போட்டியாளர் உலகமெங்கிருந்தும் பங்கு பற்றலாம்.

போட்டியாளர்கள் தமது நிழற்படம் கொண்ட சுயவிபரக் கோவையை தமது பிரதியுடன் தனியாக இணைத்திருத்தல்.

பிரதிகள் குறுந்திரைக் கதை வடிவில் (சர்வதேச நியமம்) அமைந்திருத்தல்.

ஏற்கனவே வெளிவராத திரைக் கதை என்பதை தமது மடல் மூலம் உறுதி செய்தல்.

குறும்படத்தின் திரைக் கதையாடல் அதிகபட்ச நேரம் 15 நிமிடங்கள்.

பிரதிகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது.

மின்னஞ்சல் வழியில் ஒருங்குறி (யுனிக்கோட்) எழுத்துருவில் ஆக்கங்கள் எதிர்வரும் 31.01.2019 இற்கு முன் கிடைகப்பெறல்

முடிவுகள் 2019 மார்ச்சு மாத இறுதியில் முறைப்படி வெளியிடப்படும்.

காக்கைக் குழுமத்தினரால் முன்னெடுக்கப்படும் நடுவர்களது முடிவே இறுதியானது.

நெறியாளர் : மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

நடுவர் குழு :

மதிப்புக்குரிய திரைத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா)

மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் (இந்தியா)

மதிப்பிற்குரிய குறுந்திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை)

போட்டித் தொடர்புகளுக்கு

காக்கைச் சிறகினிலே : kipian2019kaakkaicirakinile@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *