மேலும்

மாதம்: January 2019

எல்லை மீறிச் செயற்படுகிறார் தயான் ஜெயதிலக – பிமல் ரத்நாயக்க

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர்  கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்

அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.

மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த  உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

மொட்டுக்கு தாவிவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பெரும் தவறு – தயாசிறி

பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விட்டமையானது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி செய்த மாபெரும் தவறு என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நீதியரசர்கள் நியமனத்தில் அரசியலமைப்புச் சபை விடாப்பிடி

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரின் பெயர்களை அரசியலமைப்பு சபை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சாந்த பண்டார

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ்

அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.