மகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.
தேவைப்பட்டால் அரசியலில் நுழைவது பற்றி முடிவு செய்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கப் போவதாக, வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.