மேலும்

மாதம்: March 2018

ஹிரோஷிமாவில் சிறிலங்கா அதிபர்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஹிரோஷிமாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

சிறிலங்கா அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

போரினால் பாதிக்கப்பட்ட, உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான பணியகத்தை நிறுவ சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ரணிலைக் கவிழ்க்க நெருங்கிய சகாக்களே திட்டம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

திங்களன்று ஜெனிவா பயணமாகிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் – சிறிலங்கா இணக்கம்

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக, இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துக் கப்பல்களை வழங்குகிறது அவுஸ்ரேலியா

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன.

முகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

முகநூல் பயன்பட்டுக்கு சிறிலங்காவில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்

சமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.