மேலும்

திங்களன்று ஜெனிவா பயணமாகிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

இந்தக் குழுவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,தலைமை தாங்கவுள்ளார்.

சிறப்பு திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் தலைவர் மனோ தித்தவெல, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நரேன் புள்ளே, சிறிலங்கா பிரதமரின் ஆலோசகர் பிரசாந்தி மகிந்தரத்ன, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஹிஷினி கொலன்னே ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.

இதற்கிடையே, சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதம் இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *