மேலும்

தீவிரவாத செயலாக இருந்தால் சேதம் அதிகமாக இருந்திருக்கும் – இராணுவப் பேச்சாளர்

brigadier sumith atapattuதியத்தலாவவில் நேற்று நிகழ்ந்த பேருந்து குண்டு வெடிப்பு தீவிரவாத செயலாக இருந்தால், சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தியத்தலாவவில் நேற்று அதிகாலை பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

படுகாயமடைந்த படையினரின் 2 பேரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையிலேயே, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாதச் செயல் அல்ல என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “ இது தீவிரவாதச் செயலாக இருந்திருந்தால், ஏற்பட்ட சேதமும் வெடிப்புத் திறனும் இன்னும் பெரியதாக இருந்திருக்கும்.

காவல்துறை மற்றும் இராணுவத்தின் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் முடிவில், குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *