மேலும்

மாவையின் மகனும் வலி.வடக்கு பிரதேச சபையில் வெற்றி

kalai amuthanஉள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனும் வெற்றி பெற்றுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு, மாவிட்டபுரம், வீமன்காமம் 9 ஆம் வட்டாரத்தில், மாவை சேனாதிராசாவின் மகன், கலைஅமுதன் போட்டியிட்டிருந்தார்.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், வலி.வடக்கு பிரதேச சபைக்குள் நுழையவுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் அவர் கந்தர்மடம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *