மேலும்

வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – ஐதேக ஆய்வில் தகவல்

ajith-pereraஎதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி  276 சபைகளைக் கைப்பற்றும் என்றும் ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே, மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில், 276 சபைகளை ஐதேக கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளாார்.

ஏனைய சபைகளில்,வடக்கு, கிழக்கில்  51 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்றும் ஐதேக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கில் மொத்தம் 34 உள்ளூராட்சி சபைகளும், கிழக்கில் மொத்தம் 45 உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.

இவற்றில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் உள்ள சபைகள் தவிர்ந்த, தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள 51 உள்ளூராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று ஐதேக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *