மேலும்

2017இல் சிறிலங்காவுக்கு 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள்

US-Dollar-And-Chinese-Yuanகடந்த ஆண்டில் (2017) சிறிலங்கா 1.63 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றிருப்பதாக, சிறிலங்கா முதலீட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு 802 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்திருந்தன. கடந்த ஆண்டு இது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கிடைத்ததே , இதுவரையில் ஒரு ஆண்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடாகும்.

2014ஆம் ஆண்டு கிடைத்த- ஆகக் கூடுதல் வெளிநாட்டு நேரடி முதலீடான 1.61 பில்லியன் டொலரையும் இது தாண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *